Vanitha Reply to Laxmi Ramakrishnan

பவர் ஸ்டாருடன் திருமணக்கோலம் மற்றும் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை கலாய்த்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி கொடுத்துள்ளார்.

Vanitha Reply to Laxmi Ramakrishnan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதற்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பவர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ள காமெடி படமான பிக்கப் டிராப் படத்திற்காக அவருடன் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். மேலும் அவரோடு கன்னத்தோடு கன்னம் ஒட்டியபடி ஒரு புகைப்படம் வெளியானது.

சித்தன் போக்கு, நமசிவாய போக்கு : சில தகவல்கள்

இந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டேக் செய்து பதிவிட லட்சுமி ராமகிருஷ்ணன் செம காமெடியா இருக்கு தயவு செய்து இனி எனக்கு டேக் செய்யாதீர்கள் என கூறியிருந்தார்.

https://youtu.be/aC5IfcFNCTSarpatta Parambarai படத்தினால் வெடித்த புதிய சர்ச்சை – வாக்குவாதத்தில் நெட்டிசன்கள்! | Pa.Ranjith

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிலுக்கு வனிதா விஜயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். விஷத்தன்மை வாய்ந்த இந்த லேடியை நான் நேசிக்கிறேன். ‌‌ அவர் எதுக்கு ரகசிய ரசிகையாகி விட்டார். நல்ல ஒரு காமெடியான ஸ்க்ரிப்ட் உடனான திரைப்படம் உங்களுக்காக உருவாகிறது என தெரிவித்துள்ளார்.

வனிதாவின் இந்த பதிலடி சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.