என்னுடைய அப்பாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய வனிதாவை பெண் ஒருவர் விளாச அந்தப் பெண்ணுக்கு வனிதா பதிலடி கொடுத்துள்ளார்.

Vanitha Reply to Fan : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் வனிதா‌. நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள்.

சில வருடங்களுக்கு முன்னர் சொத்து விவகாரம் காரணமாக தன்னுடைய பெற்றோர்களிடம் சண்டையிட்டு அவர்கள் குறித்து சமூக வலைதளங்களை அளித்த பேட்டியில் தாறுமாறாக பேசினார். இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இதன் காரணமாக தற்போது வரை வனிதா குடும்பத்தாரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இப்படியான நிலையில் நடிகை வனிதா சமீபத்தில் தன்னுடைய அப்பாவிற்கு பிறந்தநாள் செல்ல அவருக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தார்.

இதுகுறித்து சிறுவயதில் தன் அப்பாவுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தினார். இதனைப் பார்த்த பெண் ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் உன்னுடைய அப்பா அம்மாவைப் பற்றி இப்படிப் பேசின என்பதெல்லாம் ஞாபகம் வருகிறது. இப்போ நல்லவ மாதிரி நாடகம் ஆடாதே என கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணின் இந்த பதிவை பார்க்க வனிதா அது என்னுடைய குடும்ப பிரச்சனை, அத நான் பாத்துக்கிறேன்.. என்னுடைய பெற்றோரை திட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீ மூடிட்டு உன் வாழ்க்கையில் பாரு என பளிச்சென பதிலடி கொடுத்துள்ளார்.

வனிதாவின் இந்தப்பதிவு சமூகவலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்களுக்கு உங்க அப்பாவை பற்றி பேசவே எல்லா உரிமையும் இருக்கு ஆனா பப்ளிக்கா அப்படி தவறாக பேசினால் நாலு பேர் இப்படி கேட்க தான் செய்வாங்க என ரசிகர்கள் சிலர் பதில் அளித்து வருகின்றனர்.

அதேசமயம் வனிதா கொடுத்தது சரியான பதில் எனவும் சிலர் கமெண்ட் அடித்துள்ளனர்.