லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் ரூபாய் 1.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருந்த நிலையில் வனிதா பதிலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Vanitha Notice to Laxmi Ramakrishnan : தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வரும் வழி கடந்த ஜூன் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வந்தனர். 


அதிலும் குறிப்பாக லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, ரவீந்திரன் ஆகியோர் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. வனிதா இவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். 


லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் வீடியோ ஒன்றில் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். அவரையும் அவரது குடும்பத்தையும் நார்நாராகக் கிழித்தார். 

நானும் மனுஷி தானே.. சூர்யா தேவிவுக்கு உதவ முன் வருவதாக… அண்டர் பல்டி அடித்த நடிகை வனிதா!


இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் ரூபாய் 1.25 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வனிதாவுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். 


இந்த நிலையில் தற்போது வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு புதிய நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிட்டதால் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. அவரால் பல விதங்களில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆகையால் அவர் எனக்கு ரூபாய் 2.50 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 


இது குறித்து ஆதாரங்களை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.