
ஷார்ட் ஹேர் உடன் கோட்டு சூட்டு போட்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் வனிதா விஜயகுமார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். வாரிசு நடிகையான இவர் ஒன்றிற்கு இரண்டு திருமணம் செய்து இரண்டிலும் தோல்வியடைந்து சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

இதனையடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.
இதனையடுத்து தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தொடர்ந்து பல புதிய பிசினஸ் தொடங்கி வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான கெட்டப்புகளில் போட்டோக்களை வெளியிட்டு வரும் வனிதா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷார்ட் ஹேர் உடன் கோட்டு சூட்டுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்