கழுத்தில் தாலியுடன் வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Vanitha in Pickup Drop Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் சந்திரலேக்கா படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அதன் பின்னர் திருமணத்திற்குச் சென்ற வனிதா சிலகாலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார். மேலும் தன்னுடைய குடும்பத்தாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இரண்டு மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

திருப்பதியில் பவித்ர உற்சவம் : இன்று முதல் 3 நாள் யாகம்-கோபூஜை

சின்னத்திரையில் பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் மீண்டும் பிரபலமானார் வனிதா. தற்போது வெள்ளித்திரையில் செகண்ட் இன்னிங்சை தொடங்கி பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் பவர் ஸ்டாருடன் இணைந்து பிக்கப் டிராப் என்ற படத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி திரைப்படம் என்ற இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது பிக்கப் டிராப் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Rajini-யை தொடர்ந்து விஜய்யை இயக்கவிருக்கும் Desingh Periyasamy – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

வனிதா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.