Vanitha in Andhagun Movie

வனிதாவுக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. அடுத்ததாக மெஹா ஹிட் படத்தின் ரீமேக் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Vanitha in Andhagun Movie : தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜய் குமார் அவர்களின் மூத்த மகள் தான் வனிதா. சந்திரலேகா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்த இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் குடும்ப பிரச்சனை காரணமாக படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் பங்கேற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் வழி தான் தற்போது படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். ஏற்கனவே பாம்பு சட்டை, அனல் காற்று ஆகிய படங்களில் நடிப்பதை தொடர்ந்து அவருக்கு ஜோடியாக 2K அழகானது காதல் என்ற படத்திலும் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது பிரசாந்த் நடிப்பில் உருவாக உள்ள அந்தாதூன் படத்தின் ரீமேக்கான அந்தகன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் பிரசாந்த் இப்படம் பற்றி பதிவிட்டு இந்த பதிவில் வனிதா படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் செய்கிறேன் எனக்கூறி அந்தகன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த திரைப்படத்தை தியாகராஜன் இயக்கும் சிம்ரன் வில்லியாக நடிக்க உள்ளார். யோகிபாபு, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்