Vanitha Clarification About Peter Paul
Vanitha Clarification About Peter Paul

மூன்றாவது கணவர் பீட்டர் பால் உடன் சண்டை போட்டு அவரை வனிதா வீட்டை விட்டு விரட்டி அடித்ததாக தகவல் பரவிய நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

Vanitha Clarification About Peter Paul : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் வனிதா. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்று மிகவும் பிரபலமானார்.

அதன்பின்னர் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்று தற்போது யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த யூடியூப் சேனலுக்கு பெரிதும் உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக வனிதா பீட்டர் பாலை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக தகவல் பரவியது.

இதுகுறித்து அவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். பீட்டர் பால் உடல்நிலை சரியில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறேன். சிலர் எனது வாழ்க்கையையும் வலியையும் வைத்து ஆனந்தம் அடைய பார்க்கிறார்கள்.

என் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதனை நேர்மையாக வெளியே சொல்பவள் நான் என கூறியுள்ளார். தேவையில்லாமல் என் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.