Vanitha Biopic Movie Promo
Vanitha Biopic Movie Promo

வனிதாவின் மூன்றாவது திருமண லைஃப் ஸ்டோரி குறும்படமாக உருவாக உள்ளது‌. இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Vanitha Biopic Movie Promo : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் தன்னுடைய அப்பா விஜயகுமார் மற்றும் அம்மா மஞ்சுளா ஆகியோரை கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார்.

அதன் பின்னர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த வனிதா உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். மூன்றாவது சீசன் முழுவதும் வனிதாவின் குரல் அதிகமாகவே இருந்தது.

இதனையடுத்து பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வந்தார்.

இந்த யூடியூப் சேனலுக்கு பெரிதும் உதவிய பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூபாய் 1.25 கோடி நஷ்ட ஈடு கேட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்.. பதிலுக்கு வனிதா கேட்ட நஷ்ட ஈடு – தொகையை கேட்டா தலையே சுற்றும்

வனிதா தன்னுடைய மூன்றாவது திருமணம் குறித்து பேசிய அனைவரையும் விளாசி எடுத்து வந்தார்.

இப்படியான நிலையில் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு குறும் படமாக உருவாக உள்ளது. இந்த குறும்படத்தை காமெடி நடிகையின் பிக்பாஸ் பிரபலமான ஆர்த்தி இயக்கியுள்ளார்.

பீட்டர் பாலாக பவர் ஸ்டார் நடிக்க அவரின் மனைவியாக அதாவது வனிதாவாக மதுமிதா நடித்துள்ளார். மேலும் கணேஷ், ஆர்த்தி உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர்.

இதுகுறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றை ஆர்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். விரைவில் முழு வீடியோ வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த ப்ரோமோ வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் வனிதா மற்றும் மதுமிதாவுக்கு இடையே பல்வேறு பிரச்சனைகள் நடந்தன.

இப்படியான நிலையில் வனிதாவை தூண்டும் வகையில் மதுமிதா நடித்திருப்பதால் மீண்டும் ஒரு பஞ்சாயத்தை வனிதா இழுத்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் ப்ரோமோ குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

https://twitter.com/Shivas87459901/status/1293547385361018882?s=19