Vanitha About Vadivel Balaji
Vanitha About Vadivel Balaji

வடிவேல் பாலாஜி என்றால் எனக்கு யார் என்றே தெரியாது எனக் கூறி ரசிகர்கள் இடையே சிக்கிக் கொண்டுள்ளார் வனிதா.

Vanitha About Vadivel Balaji : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. சின்னத்திரை ரசிகர்கள் பலருக்கும் வடிவேல் பாலாஜியை நிச்சயம் தெரியும்.

இவர் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு ஒட்டுமொத்த சின்னத்திரை திரையுலகமும் இரங்கல் தெரிவித்து வந்தது.

இவரின் மறைவு குறித்து பதிவித்து ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் வனிதாவுக்கு டேக் செய்து இருந்தார். இதனை பார்த்த வனிதா எனக்கு வடிவேல் பாலாஜி யார் என்று தெரியாது எனக் கூறியுள்ளார்.

வடிவேல் பாலாஜி மரணத்திற்கு காரணம் என்ன?? அவரின் உடலில் என்ன தான் பிரச்சினை? – வெளியான திடுக்கிடும் தகவல்

KPY நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் உங்களுக்கு வடிவேல் பாலாஜியை தெரியாதா? இப்போ நீங்க அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும் தகுதி இல்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் வனிதா இதுவரை நான் அவருடன் இணைந்து பணியாற்றியது இல்லை. அவரைச் சந்தித்ததும் இல்லை. அவர் திறமையான மனிதர் என்பதை மட்டும் கேள்விப்பட்டு இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.