Vanitha About Her 3rd Marriage
Vanitha About Her 3rd Marriage

திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு வனிதா விளக்கம் அளித்துள்ளார்.

Vanitha About Her 3rd Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் பிரபல நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள் வனிதா விஜயகுமார்.

இவர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் சில படங்களில் நடித்து வந்த வனிதா ஒன்றிற்கு இரண்டு திருமணம் செய்தார்.

மங்காத்தா படத்தின் மாஸ் பைக் ரேஸிலில் அஜித் நடிக்கல, நடந்தது இது தான் – இத்தனை வருடத்திற்குப் பிறகு வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஆனால் இரண்டு திருமணமும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறினார். ஆனால் இவர்களின் திருமணம் நடைபெறவில்லை.

இவ்வளவு சர்ச்சைகளுக்குப் பிறகு வனிதா உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் க்கு பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை தட்டிச் சென்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த யூடியூப் சேனலுக்கு உதவி வருபவர் பீட்டர் பால். தற்போது இவருடன் காதல் ஏற்பட்டு அவரை வரும் ஜூன் 27ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

புலி படமே முதல் படம்.. கிடுகிடுவென உச்சம் பெற்ற PRO யுவராஜ் – உண்மையில் யார் இவர்?

இது குறித்த தகவல்கள் பரவிய நிலையில் வனிதா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது தனக்கு திருமணம் நடக்க இருப்பது உண்மை தான். தன்னுடைய மகள் ஜோவிகா தான் இந்த திருமணத்திற்கு காரணம். இந்தத் திருமணம் தனக்கு மகிழ்ச்சியைத் தர உங்களின் ஆசீர்வாதம் தேவை என அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/CBi3CdejO8s/?igshid=16wd62tqtrw5f