Vanitha About Bigg Boss 4
Vanitha About Bigg Boss 4

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு இவர்களை அனுப்புங்க என வனிதா சில பிரபலங்களின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

Vanitha About Bigg Boss 4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதன் காரணமாக அடுத்தடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தன.

என்னால இனி விளையாட முடியாது.. வீட்டை விட்டு வெளியேறுவாரா வனிதா – பிக் பாஸ் ப்ரோமோ.!

மூன்றாவது சீசனில் வனிதாவின் செயல்களால் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. வனிதாவின் திறமையை அறிந்த விஜய் டிவி அவரை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதற்கு பிறகு குக் வித்து கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் வின்னரானார்.

தற்போது கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் வனிதா அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் குறித்து பேசியுள்ளார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகை அம்பிகாவை அனுப்பி வைத்தால் சிறப்பாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

நடிகை அம்பிகா படத்தில் பார்ப்பதற்கு ஒரு மாதிரி ஆனால் நிஜத்தில் அவர் வேறு மாதிரி. அவர் சென்றால் காமெடியாக இருக்கும் என வனிதா தெரிவித்துள்ளார்.

தர்ஷன் இல்லை.. முதன்முறையாக கமலஹாசனுடன் இணைந்த‌ பிக்பாஸ் பிரபலம், மிரள வைக்கும் கூட்டணி – அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இதோ.!

அதுமட்டுமல்லாமல் குக் வித் கோமாளி டீமில் இருந்து பாலா, புகழ் மற்றும் சிவாங்கி ஆகியோர் சென்றால் நன்றாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஒருவேளை இது நடந்தால் நிச்சயம் பிக் பாஸ் 4 கொஞ்சம் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.