Vanitha 3rd Marriage Benefits
Vanitha 3rd Marriage Benefits

மூன்றாவது திருமண சர்ச்சையால் வனிதாவிற்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது

Vanitha 3rd Marriage Benefits : தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார் இவர் கடந்த ஜூலை 27-ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமணம் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தன்னை விமர்சித்த பலருக்கும் உடனே பதிலடி கொடுத்து அவர்களின் வாயை அடைத்து வந்தார்.

இவர்களின் திருமண விவகாரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்திரன் என வாயை கொடுத்து மாட்டிக் கொண்டவர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

கல்யாணத்தைப் பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை, சிவகார்த்திகேயன் கொடுத்த கிப்ட் – திருமண கலாட்டாக்கள் குறித்து பேசிய யோகி பாபு.!

இந்த மூன்றாவது திருமண சர்ச்சையில் வனிதாவிற்கு நல்லதே நடந்துள்ளது. இவர் நடத்திவரும் யூடியூப் சேனலை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது தனக்கு இருக்கும் ரசிகர்கள் ஆதரவை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

வனிதாவின் மூன்றாவது திருமணத்தால் அவரது மகன் ஸ்ரீ ஹரி வீட்டை விட்டு வெளியே வராமல் நண்பர்களிடமும் பேசாமல் சமூக வலைதளத்தில் விலகி இருப்பதாக அவரது முதல் கணவர் ஆகாஷ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.