
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்.
இந்திய சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம். இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

குறிப்பாக தமிழில் இவர் பாடிய நித்தம் நித்தம் நெல்லு சோறு, மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படும் பாடல்களாக இருந்து வருகிறது.

மூன்று முறை தேசிய விருது வாங்கியுள்ள இவருக்கு தற்போது 78 வயதாகும் நிலையில் உடல் நல குறைபாடு வயது முதிர்வு காரணமாக சற்றுமுன் காலமானார். இவரது மறைவை திரையுலகில் சோகத்தை ஏற்படுத்த ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.