Vani Bhojan Upcoming Movies

திரில்லர் படத்தில் நடிக்கும் பரத் உடன் இணைந்து நடிக்க உள்ளார் வாணிபோஜன்.

Vani Bhojan Upcoming Movies : சின்ன திரை நயன்தாரா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் வாணி போஜன் தமிழில் தெய்வ மகள் தொடர் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து தமிழில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த”ஓ மை கடவுளே” படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரும் நிலையில் வாணி போஜன் மீண்டும் அசோக் செல்வனுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்
“சியான் 60” என அழைக்கப்படும் பெயரிடப்படாத படத்தில் விக்ரம் நடிக்கிறார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் நடிக்க உள்ளார். சியான் 60 படத்திற்கு “திறவுகோல் மந்திரவாதி” என்ற தலைப்பில் பெயர் வைக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின்
“ஜகமே தந்திரம்” படத்தினை இயக்கியுள்ளார். இதனை அடுத்து இயகக” உள்ள சியான் 60″ படத்தில் வாணி போஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Vani Bhojan At The ‘Oh My Kadavule’ Press Meet

அடுத்ததாக அறிமுக இயக்குனர் இயக்கத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக வாணிபோஜன் ஒப்பந்தமாகி உள்ளார். “பாயும் ஒளி நீ எனக்கு”என்ற‌ பெயரில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை பிக் பிரிண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை தொடர்ந்து அதர்வா நடிப்பில் உருவாக உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக வாணிபோஜன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அறிமுக இயக்குனர் இயக்க உள்ள இந்த படத்தை தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சசிகுமார் தற்போது “பகைவனுக்கு அருள்வாய்” என்ற படத்தில் வாணி போஜனுடன் கைக்கோர்க்கிறார்.
இப்படத்தில் பிந்து மாதவியும் நடிக்க உள்ளார். மேலும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படத்தில் பரத்திற்கு ஜோடியாக சின்ன திரை நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது.
விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

அடுத்ததாக “தாழ்திறவா” என்ற படத்தில் கவிஞன் கண்ண தாசன் பேரன் ஆதவ் கண்ண தாசனுக்கு ஜோடியாக வாணிபோஜன் இணைய இருக்கிறார்.மேலும் ராதா மோகன் இயக்கத்தில் ஓடிடியில் வெளிவரும் படத்தில் வைபவ் மற்றும் வாணி போஜன் நடிக்க உள்ளனர். இப்படத்தில் கருணாகரன், மயில்சாமி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். அடுத்ததாக சூர்யா நடிக்கும் இரண்டு படங்களிலும் வாணி போஜன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சின்ன திரையில் கலக்கிய
வாணி போஜனை வெள்ளி திரையில் காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்து கொண்டு உள்ளார்கள்.