சியான் 60 திரைப்படம் இப்படித்தான் இருக்கும் என மொத்தத்தையும் உளறிக் கொட்டியுள்ளார் நடிகை வாணி போஜன்.

Vani Bhojan Revealed Chiyaan60 Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக கோப்ரா மற்றும் சியான் 60 என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

சியான் 60 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து அவருடைய மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணிபோஜன் நடித்து வருகிறார். இதுவரை 50 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன.

சியான் 60 இப்படித்தான் இருக்கும்.. மொத்தத்தையும் உளறிக் கொட்டிய வாணி போஜன் - செம கோபத்தில் கார்த்திக் சுப்பராஜ்

இந்த நிலையில் தற்போது வாணிபோஜன் அளித்த பேட்டி ஒன்றில் சியான் 60 படம் எப்படி இருக்கும் என கேட்டுள்ளனர். அதற்கு வாணி போஜன் முதல் பாதி காதல் நிரம்பி வழிவதால் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும். மொத்தத்தில் சியான் 60 காதல் கலந்த ஆக்ஷன் திரைப்படம் என கூறியுள்ளார்.

இதுவரை படப்பிடிப்பு புகைப்படங்கள் கூட லீக் ஆகாமல் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் வாணிபத்தில் மொத்த கதையும் உளறிக்கொட்டி இருப்பது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வாணி போஜன் மீது சுமத்தப்படும் இருப்பதாக கூறப்படுகிறது.