Vani bhojan join in Gangers movie
Vani bhojan join in Gangers movie

சுந்தர் சி இயக்கும் கேங்கர்ஸ் படத்தில் இணைந்துள்ளார் பிரபல நடிகை.

இயக்குனர்,நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சுந்தர்சியுடன் இணைந்து இந்தப் படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது மட்டுமில்லாமல் கத்ரின் தெரேசா, முனிஸ்கான், பக்ஸ், மைம் கோபி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி மற்றும் வடிவேலு காம்போ என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்று நாம் சொல்லலாம். பல வருடங்களுக்குப் பிறகு இணையும் இந்த கூட்டணியில் வெளியாகும் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.