Vani Bhojan in Red Saree

சேவையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் நடிகை வாணி போஜன்.

Vani Bhojan in Red Saree : தமிழ் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் என்ற சீரியலில் நாயகியாக நடித்தவர் வாணிபோஜன். இந்த சீரியல் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

தெய்வமகள் சீரியல் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இதன்பின்னர் வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே, லாக்கப் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Vani Bhojan At The ‘Oh My Kadavule’ Press Meet

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தில் அவருடன் இணைந்து வாணிபூஜன் நடிக்கிறார். மேலும் இந்த பிஸியான நேரத்திலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதையும் மறப்பதில்லை.

அந்த வகையில் தற்போது சேலையில் செம அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ளார்.