Vani Bhojan In Murugadoss Direction
Vani Bhojan In Murugadoss Direction

முருகதாஸ் இயக்கத்தில் வாணி போஜன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vani Bhojan In Murugadoss Direction : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலமாக பிரபலமானவர் வாணி போஜன்.

இந்த சீரியலுக்கு பிறகு விஜய் டிவியில் நடுவராக பங்கேற்ற இவர் வெள்ளித் திரையில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.

விஜய் படத்தில் இணைந்த வாணி போஜன் – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.!

இந்தப்படம் மட்டுமல்லாமல் வைபவ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்குவில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது இவர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அது முழு நீள திரைப்படம் அல்ல. வெப் சீரிஸ் தொடரில் நடிக்க உள்ளாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.