Vanguard Movie Public Opinion

YouTube video

Pawan Prayer for Super Star Rajinikanth : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் படக்குழுவினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நான்கு பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் படப்பிடிப்புகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளித்து வருகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் அறிக்கை ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.