Vandi Movie

Vandi Movie Sensor : தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள வண்டி படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவர் விதார்த். தொடர்ந்து தரமான கதையம்சம் உடைய படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் ராஜேஷ் பாலச்சந்திரன் இயக்கத்தில் ஹஸீர் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வண்டி. இந்த படத்திற்கு சுராஜ் எஸ் குரூப் என்பவர் இசையமைத்துள்ளார். சாந்தினி நாயகியாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கிஷோர், ஜான் விஜய் ஆகியோரும் இப்படத்தின் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்திற்கான சென்சார் பணிகள் நிறைவடைந்துள்ளது. படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் அளித்துள்ளது.

இம்மாதத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

இப்படத்தின் டீஸர், ட்ரைலர், பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

எஸ்.போகஸ் ( S Focuss ) M. சரவணன் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Vandi Sensor

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.