வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிக்க போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

வணங்கான் படத்தில் இருந்து விலகிய சூர்யா.. அவருக்கு பதிலாக நடிக்க போவது யார் தெரியுமா??

இதனையடுத்து பாலா இயக்கத்தில் உருவாக உள்ள வணங்கான் படத்தை தயாரித்து சூர்யா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு படப்பிடிப்பும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இப்படியான நிலையில் படத்தின் கதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக பாலா தனது அறிக்கையில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

வணங்கான் படத்தில் இருந்து விலகிய சூர்யா.. அவருக்கு பதிலாக நடிக்க போவது யார் தெரியுமா??

இப்படியான நிலையில் அடுத்ததாக வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிக்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் தற்போது பாலா இயக்கி தயாரிக்கும் இந்தப் படத்தில் அதர்வாவை நடிக்க வைக்க பாலா முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.