vanangaan movie latest update
vanangaan movie latest update

வணங்கான் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வணங்கான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

பாலா இயக்கத்திலும், சுரேஷ் காமாட்சி தயாரிப்பிலும் உருவாகியுள்ள வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். குறிப்பாக பாலா இயக்கத்தில் வெளியாக இருக்கும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.