இயக்குனர் வம்சி படைப்பள்ளி பகிர்ந்திருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் வம்சி படைப்பள்ளி. இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்றைய தினம் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு சூப்பர் ஹிட் அடித்து வருகிறது.

வாரிசு வெற்றிக்கு நன்றி!!… இயக்குனர் வம்சி படைப்பள்ளியின் நெகிழ்ச்சியான ட்வீட் வைரல்.!

எப்போதும் ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து அனைவரையும் அசத்தி வரும் தளபதி விஜய் அவர்கள் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக இப்படத்தில் யதார்த்தமாக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறார். இதனால் ரசிகர்களின் கவனத்தை அதிக அளவில் கவர்ந்திருக்கும் இப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்து வருகிறது.

வாரிசு வெற்றிக்கு நன்றி!!… இயக்குனர் வம்சி படைப்பள்ளியின் நெகிழ்ச்சியான ட்வீட் வைரல்.!

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் நடிகர் விஜயை அவரது இல்லத்தில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் வம்சி நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், “வாரிசு படத்தின் மீது ரசிகர்கள் காட்டும் அன்பிற்கு மிக்க நன்றி. நண்பா, நன்பிக்கு நன்றி. உங்கள் நம்பிக்கைக்கு நன்றி என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். அதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.