Vallalar

☆ வள்ளலார் என்று அழைக்கப்படும்  இராமலிங்க அடிகளார் கி. பி பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒப்பற்ற ஓர் ஆன்மீகவாதி ஆவார்.

☆ இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடியவர் இவர் திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.

☆ 1874ம் வருடம் ஜனவரி 30ம் தேதி, வள்ளல் பெருமான் தன்னுடைய அறையின் உள்ளே இருந்த விளக்கை வெளியே கொண்டு வந்து வைத்த அவர், தொண்டர்களுக்கு அருளாசி வழங்கி விட்டு, தான் பத்து பதினைந்து தினங்கள் தனியறை ஒன்றில் இருக்கப் போவதாகவும், அறையின் கதவைத் திறக்க வேண்டாமெனவும், அப்படித் திறந்து பார்த்தால் யாருக்கும் எதுவும் தெரியாது. வெற்று அறையாகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு, இரவு 12 மணி அளவில் சித்தி வளாகத்தில் இருந்த மாளிகையின் அறையொன்றில் நுழைந்தார்.

☆ அவரது தொண்டர்கள் அந்த அறையின் வெளிப் புறத்தை தாழிட்டுப் பூட்டினார்கள். அதற்குப் பிறகு வள்ளல் பெருமானை யாரும் உயிரோடு பார்க்கவில்லை. அவர் ஜோதியாக ஆனாரா, காற்றிலே கலந்தாரா என்பது தெரியாவிட்டாலும், அவர் மரணத்தை வென்ற மாபெரும் ஞானி என்பதை உலகம் உணர்ந்தது.

☆ வள்ளலார் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டது உண்மையே. அவர் கலந்ததை அப்படிச் சொல்லக்கூடாது. இறைவன் வள்ளலாருடன் கலந்துவிட்டான் என்றுதான் கூறவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here