Vallaarai Keerai
Vallaarai Keerai

Vallaarai Keerai :

♡ வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. ஞாபக சக்தியை அதிகமாக மேம்படுத்துவதால் இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர்.

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ஏ, உயிர்சத்து சி மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.

♡ காலைவேளையில் பறித்த வல்லாரை கீரையை சில மணி நேரங்களில் பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால் மூளை மிகுந்த செயலாற்றல் பெறும். மிளகுடன் உண்டு வர, உடற்சூடு தணியும்.

♡ குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போன்றவை குணமாகும். பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின் பசும்பால் உண்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

♡ நெல்லிக்காய் அளவு வீதம் 21 நாட்கள் சாப்பிட வாய்வுத் இரும் வல்லாரை இலை தூள் உடன் சோம்புத்தூள் எடுத்து கலந்து தின்று வெந்நீர் குடித்துவர உஷ்ண வயிற்று வலி தீரும்.

♡ பத்து கிராம் வல்லாரை பொடியுடன் 5 கிராம் அதிமதுரத்தை தூள் கலந்து இரவில் தூங்கப்போகும் முன் தின்று வெந்நீர் குடிக்க மலச்சிக்கல் தீரும்.

♡ அதிகாலையில் வல்லாரை இலைச்சாறு 60 மில்லி லிட்டர் அளவில் குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும்.

♡ உடல் சுறுசுறுப்புடன் இருக்க
வல்லாரைப்பொடியை நெய்யில் கலந்து காலை,மாலை சாப்பிட்டு வர உடல் சுறுசுறுப்புடன் இருக்கும்.

♡ ஞாபக மறதி குறைய ஆரைக்கீரை, வல்லாரை இலை மற்றும் மணத்தக்காளி இலை ஆகியவற்றை சிறிதாக வெட்டி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை இடித்து போட்டு நீர் விட்டு ரசம் போல செய்து காலை, மாலை குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து ஞாபக மறதி குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here