தல அஜித்தின் விஸ்வாசம் படத்தினை மிஞ்சும் அளவிற்கான காட்சிகள் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Valimai Vs Viswasam Sentiment : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த படத்தின் அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மே 1ஆம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரானா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் தள்ளி போயுள்ளது.

விஸ்வாசம் படத்தை மிஞ்ச போகும் வலிமை - வெளியான அதிரடி தகவல்.!!

இந்நிலையில் தற்போது படம் பற்றிய சூப்பர் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அண்ணன், தங்கை, அம்மா, அப்பா என் அனைத்து சென்டிமென்ட்டுகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உள்ள காட்சிகள் விஸ்வாசம் படத்தினை மிஞ்சும் அளவில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.