வலிமை ரிலீஸ் விவகாரத்தில் படக்குழு எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது.

Valimai Vs Annathae Valimai Vs Annathae : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. படம் தொடங்கி கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகியும் படக்குழு எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் தான் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகின. இவற்றை தொடர்ந்து தற்போது கடல்வாழ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகியது.

தேங்காய் சுடும் பண்டிகையின் ஐதீகம்

திரும்பவும் மோதிப் பார்த்திடுவோம்.. வலிமை ரிலீஸில் படக்குழு எடுத்த அதிரடி முடிவு

இவற்றைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் டீசர் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே ஆயுதபூஜை விருந்தாக வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் இதனால் வலிமை திரைப்படம் அண்ணாத்த படத்தோடு நேருக்கு நேர் மோதும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே தல அஜித்தின் விசுவாசம் மற்றும் ரஜினியின் பேட்டை ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிவாசல் படத்திற்காக சூர்யா எடுத்த அதிரடி முடிவு