Valimai Vs Annathae Release

வலிமை பட ரிலீஸில் அஜித் போட்டுள்ள கணக்கு பக்கா ப்ளானாக உள்ளது.

Valimai Vs Annathae Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தை எச் வினோத் தான் இயக்கி வருகிறார்.

இவர் இதற்கு முன்னதாக தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி இருந்தார். ஆனால் இது ரீமேக் படம் என்பதால் நடிகர் வினோத்தின் Detailed Touch-ஐ ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் வலிமை படத்தில் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் இந்த படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் பரவி வரும் கொரானா வைரஸால் அது சாத்தியமில்லாமல் போனது.

இதன் காரணமாக நவம்பர் மாதத்தில் படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி அடுத்த வருட (2021) சம்மருக்கு படத்தை வெளியிட அஜித் திட்டமிட்டுள்ளார்.

அதேபோல் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 2021 ஆம் ஆண்டு சம்மருக்கு வெளியிட திட்டமிட்டு வருகிறது.

சிறுத்தை சிவா அஜித்தின் நண்பராக இருந்தாலும் இந்த இரண்டு படங்களுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் மோதி கண்டபோது இரண்டு படங்களும் சமமான அளவில் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

இந்த முறை முதலில் ஜெயிக்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.