Valimai Thala Ajith
தல அஜித் நடிக்க இருக்கும் வலிமை படத்தில் அவரை எதிர்க்கும் வில்லன் கதாபத்தில் நடிக்க உள்ளவர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தல அஜித் நேர் கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, அதே கூட்டணியில் மீண்டும் இணைந்து உள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் தல நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு வலிமை என்று பெயர் வைத்து உள்ளார்கள்.

வலிமை படத்தில் நான்கு நாயகிகளா? யார் யார்? – உண்மை என்ன?

அதிரடியான சண்டை காட்சிகள் கொண்ட படமாக இந்த படம் இருக்கும் என்றும், இதில் இளமையான போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், அஜித் அவர்களுக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் மற்றும் நடிகர் SJ சூர்யாவிடம் பேசப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், SJ சூர்யா தான் இந்த படத்தில் நடிக்க தயாராகி உள்ளேன் என்றும் இது வரை வலிமை படக்குழு வில்லனாக நடிப்பதை பற்றி தன்னிடம் பேசவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

தல அஜித் இரண்டு வேடங்களில் நடித்து இருந்த வாலி படத்தின் இயக்குனர் SJ சூர்யா என்பது குறிப்பிட தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here