Valimai Update Details
Valimai Update Details

ஆகஸ்ட் 3ம் தேதி அஜித் ரசிகர்களுக்கு தரமான சம்பவம் மற்றும் காத்திருப்பதாகக் வினோத் பெயரில் பதிவு ஒன்று பதிவாகியுள்ளது.

Valimai Update Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தன. பரவி வரும் கொரானா வைரஸ் காரணமாக படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் வருத்தத்தில் உள்ள அஜித் ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட் ஏதாவது கொடுங்கள் என ஆவலுடன் கேட்டு கொண்டிருக்கின்றனர்.

இதற்காக தினம் தினம் தயாரிப்பாளர் போனி கபூரிடம் அன்பாக கேட்கின்றனர். கோபமாக இருக்கின்றனர், சில சமயங்களில் ஆவேசத்துடன் திட்டியும் கேட்கின்றனர் ஆனால் இதுவரை படக்குழு ரசிகர்களின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை.

விஸ்வாசம் திரைப்படத்தால் எழுந்த பெரும் சந்தேகம், முக்கிய பிரபலத்தின் அதிரடி பதிவு – தெறிக்க விட்டு கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

இந்த நிலையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி வலிமை படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக இயக்குனர் வினோத் பெயரில் பதிவு ஒன்று பதிவாகியுள்ளது.

ஆனால் இதுவும் உண்மை இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம். வினோத் ட்விட்டர் உள்ளிட்ட எந்த சமூக வலைதளப் பக்கங்களிலும் இல்லை என ஏற்கனவே அறிக்கை ஒன்றின் மூலம் படக்குழு உறுதிப்படுத்தியது.

இதனால் ஆகஸ்ட் 3ம் தேதி வலிமை அப்டேட் வெளியாக வாய்ப்பில்லை. இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சிலர் இதை உண்மை என மகிழ்ச்சியுடன் சிலர் பேக் ஐடி என்பதை கண்டுபிடித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://twitter.com/UA_nase22/status/1284144029500874755?s=19
https://twitter.com/Praveens_18/status/1284160133392527361?s=19
https://twitter.com/ThalaValimai15/status/1284148925985746949?s=19