வலிமை பட ட்ரைலர் படைத்த சாதனையால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Valimai Trailer Record in YouTube : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கலுக்கு வெளியாக இருந்த இந்த படம் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ளது.

வலிமை பட ட்ரெய்லர் படைத்த பெரும் சாதனை.. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்த படத்தின் டிரைலர் புத்தாண்டு விருந்தாக வெளியானது. ஜி ஸ்டுடியோஸ் மற்றும் சோனி மியூசிக் என இரண்டு யூடியூப் சேனலில் இந்த டிரைலர் வெளியானது. தற்போது வரை இந்த ட்ரைலர் மொத்தமாக 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.

வலிமை பட ட்ரெய்லர் படைத்த பெரும் சாதனை.. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

அதுமட்டுமல்லாமல் 2 மில்லியன் லைக்குகளை குவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.