தல அஜித்திற்காக வலிமை என்ற டைட்டிலை விட்டு கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஒருவர்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்க உள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு வலிமை என டைட்டில் வைத்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. ஆனால் இந்த டைட்டிலை போனி கபூர் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யவில்லை.
வலிமை என்ற டைட்டிலை செல்வா கென்னையா என்ற தயாரிப்பாளர் தான் பதிவு செய்துள்ளார். இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் வலிமை டைட்டிலை அஜித்திற்காக விட்டு கொடுத்துள்ளார்.