Valimai Telungu Dubbing Rights

வலிமை படம் பற்றி அடுத்தடுத்து வெளியாகி வரும் தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Valimai Telungu Dubbing Rights : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இயக்குனர் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் வலிமை படத்தின் ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமையை யுனைட்டட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ்நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமைக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். கிட்டத்தட்ட 10 கோடி வரை இந்தப் படத்தின் டப்பிங் உரிமைக்கு வியாபாரம் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இந்த வியாபாரமும் முடிந்துவிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.