Valimai Teaser Release Update

வலிமை பட டீசர் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Valimai Teaser Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தினை போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்கியிருந்தார். நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அஜித் மீண்டும் இதே கூட்டணியில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். ‌‌

வலிமை படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை முடித்து விட்டு பத்து நாட்கள் ஐரோப்பா செல்ல உள்ளது படக்குழு.

கொரோனா தொற்று- ஊரடங்கெல்லாம் என்னை பாதிக்கலை : பி.வி. சிந்து ‘கெத்து’

மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தான் வெளியாகியது. இதனையடுத்து தற்போது படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Valimai-யில் நானும் ஒரு Role பண்ணி இருக்கேன்! – Actress Saranya Ravichandran Exclusive Interview

கோலிவுட் வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி வலிமை படத்தின் டீசர் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.