Valimai Stunt Sequence Details

வலிமை படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Valimai Stunt Sequence Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் காட்சிகளுடன் சென்டிமென்ட் காட்சிகளும் கலந்த ஒனறாக படம் உருவாகி வருகிறது.

வலிமை படத்துல இத்தனை சண்டை காட்சிகளா?? அப்போ படம் முழுக்க இப்படி தானா? வெளியான ஷாக் தகவல்.!!

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் காட்சிகளை கவனித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது படத்தின் முதற் பாதியில் 5 சண்டை காட்சிகள் மற்றும் இரண்டாம் பாதியில் மூன்று சண்டை காட்சிகள் உள்ளதாம். இதன் பல காட்சிகளின் படப்பிடிப்பில் அஜித்திற்கு ரத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் மொத்தம் 8 சண்டை காட்சிகள் என்பதால் படம் முழுக்க சண்டையா தான் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.