Valimai
வலிமை திரைப்படம் என்னாச்சு? எப்போது தொடங்கும் என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் இறுதியாக எச். வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித், எச் வினோத் இயக்கத்திலேயே நடிக்க உள்ளார். போனி கபூரே இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார்.

படத்தின் படப்பிப்பு டிசம்பரில் தொடங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் இன்னும் தொடங்கவே இல்லை. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி வரும் டிசம்பர் 13-ம் தேதி முதல் வலிமை படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கோடை விடுமுறையில் இப்படம் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்துடன் மோதும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.