Valimai Shooting Start
தல அஜித் நடிக்க இருக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடக்க உள்ளது.

Valimai Shooting Start : நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜித் சிறுது ஓய்விற்கு பிறகு, போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

வெற்றி கூட்டணியில் மீண்டும் இணைந்து உள்ள தல அஜித் நடிக்கும் 60-வது படம் இது. இதற்கு வலிமை என்று பெயர் வைத்து உள்ளார்கள்.

அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். அதிக சண்டை காட்சிகளும், செண்டிமெண்ட் காட்சிகளும் படத்தில் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது வரை படத்தில் அஜித் அவர்களுக்கு ஜோடியாக யார் நடிக்க உள்ளார் என்பது தெரியவில்லை. அதற்கான தேடுதலில் இயக்குனர் உள்ளார்.

இந்த நிலையில், டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்து இருந்த படக்குழு திடீரென இந்த மாதம் 20-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here