Valimai Shooting
அஜித் சண்டையிடும் சில புகைப்படங்கள் இணையத்தில் வலிமை பட சண்டை காட்சி என வைரலாகி வந்த நிலையில் அது குறித்த உண்மை வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

ரசிகர்கள் இப்படத்தில் இருந்து அப்டேட் எதுவும் வராதா? என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சில சண்டை காட்சி புகைப்படங்கள் வலிமை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் என வைரலாகின.

ஆனால் உண்மையில் அவை வலிமை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அல்ல.. நேர்கொண்ட பார்வை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தான்.

வலிமை படத்தின் காட்சிகள் எதுவும் சமூக வளையதளங்களில் கசிந்து விட கூடாது என்பதில் வினோத் மிகவும் கவனமாக படத்தை கையாண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.