Ajith
வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் விபத்துக்குளாகி இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Ajith Bike Accident Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித் பைக் ஓட்டும் காட்சியில் நடித்த போது விபத்து ஏற்பட்டு சிறு காயம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவியது.

இந்நிலையில் அஜித் பைக் ஓட்டும் போது விபத்துக்குள்ளான வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது, இது வலிமை ஷூட்டிங் ஸ்பாட் விபத்து வீடியோ எனவும் சிலர் வைரலாக்கி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் இது வலிமை ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இல்லை. 7 வருடத்திற்கு முன்னர் அஜித் பைக் ரேஸின் போது விபத்தில் சிக்கிய வீடியோ என்பதும் தெரிய வந்துள்ளது.