Valimai
வலிமை படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கி வரும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்ஸ் சிட்டியில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்நிலையில் தற்போது ஐதராபாத் ஷூட்டிங் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் கோகுலம் பிலிம்ஸ் ஸ்டூடியோவில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனால் சென்னை ரசிகர்கள் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.