வலிமை படத்தின் ஷூட்டிங்கிற்காக தல அஜித் ரஷ்யா கிளம்பி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Valimai Shooting in Russia : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். ‌‌‌‌‌

ரஷ்யா கிளம்பிய அஜித்.. பரபரக்கும் சண்டை காட்சிகள்.!!

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றதை தொடர்ந்து ரஷ்யாவில் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டது.

கருணை பொழியும் திருவிளையாடல் புராணம்..

அதன்படி படத்தின் ஷூட்டிங்கிற்காக தல அஜித் ரஷ்யா சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அங்கே ஒரு சில நாட்கள் நடைபெறும் சூட்டிங்கோடு வலிமை படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து விடும் என தகவல் கிடைத்துள்ளது.

பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Chithra Passes away

அதன் பின்னர் வலிமை படத்தின் டீசர், டிரைலர், செகண்ட் சிங்கிள் உள்ளிட்டவை வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.