வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக் குறித்த சூப்பர் தகவலை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

Valimai Second Single Track : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி அமாவாசை : முன்னோரை வழிபட, தேடி வரும் நன்மைகள்..

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரும் சாதனை படைத்தது. விக்னேஷ் சிவன் வரிகளில் நாங்க வேற மாதிரி என்ற பாடல்தான் வெளியாகியிருந்தது.

வருத்தத்தில் இருந்த Yashika-வுக்கு ஆறுதல் கூறிய Vanitha! – என்ன சொன்னார் தெரியுமா? | Car Accident

இதனைத் தொடர்ந்து தற்போது செகண்ட் சிங்கிள் ட்ராக் குறித்த தகவலை யுவன்-ஷங்கர்-ராஜா வெளியிட்டுள்ளார். விரைவில் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியாகும் என தெரிவித்துள்ளார். மேலும் இது மாஸ் பாடலாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.