வலிமை படத்தின் சிங்கிள் ட்ராக் அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Valimai Second Single Track : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார். படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த படத்தில் இருந்து நாங்க வேற மாதிரி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியானது. அதன்பிறகு கிளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. வெகுவிரைவில் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் இன்று திடீரென 7 மணிக்கு இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது வலிமை படத்தின் சிங்கிள் ட்ராக் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.