Valimai Screenplay Changes
Valimai Screenplay Changes

ஊரடங்கால் வலிமை திரைப்படத்தில் வினோத் சில மாற்றங்களை செய்துள்ளார்.

Valimai Screenplay Changes : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் அஜித் போலீஸாக நடிக்கிறார். மேலும் ஹீமா குஷி நாயகியாக நடிக்கிறார்.

RDX100 படத்தின் கதாநாயகனான கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரபல நடிகரின் மகன் ஒருவனும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் சென்னையில் நடைபெற்ற தொடர்ந்து வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் அதிகம் இருந்தன.

அஜித் பட வாய்ப்பை தவற விட்ட நடிகை – வருத்தத்துடன் அவரே சொன்ன தகவல்.!

ஆனால் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சென்று படப்பிடிப்புகளை நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக தெரிகிறது.

இதனால் இப்படத்தின் இயக்குனரான இவர் வெளிநாடுகளிலும் படமாக்க இருந்த காட்சிகளை மாற்றி அமைத்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தையும் டெல்லி, மும்பை போன்ற இடங்களில் படமாக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தல அஜித்தும் வினோத்தின் இந்த முடிவிற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக தெரிகிறது.