அஜித் ரசிகர்களுக்கு இன்று வலிமை படத்தில் இருந்து சூப்பர் சர்ப்ரைஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Valimai Release Promo Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தினை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஹீமா குரோஷி நாயகியாக நடிக்க தெலுங்கு பட நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து மோஷன் போஸ்டர், கிளிம்ஸ் வீடியோ, இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இன்று டீசர் அல்லது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

‘பிரபஞ்ச அழகி’ பட்டம் வென்றார், 21 வயது இந்தியப் பெண்..

ஏற்கனவே அஜித் ரசிகர்கள் பில்லா திரைப்படம் வெளியாகி இன்றோடு 14 வருடங்களாகியதை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் கூடுதல் கொண்டாட்டமாக வலிமை படத்தின் அப்படியே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல கதைக்காக ஏங்கிட்ட இருந்தேன் – உருக்கமாக பேசிய Jai Bhim பிரபலம் |#SilaNerangalilSilaManithargal