பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் இல்லை என போனி கபூர் அறிவித்துள்ளார்.

Valimai Release Postponed : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தின் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

படம் உலகம் முழுவதும் பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ‌‌‌‌‌‌‌‌‌‌‌

இதன் காரணமாக தற்போது பொங்கலுக்கு வலிமை ரிலீஸ் ஆகாது. வெகு விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் மறு ரிலீஸ் தேதி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.