Valimai Release Latest Update
Valimai Release Latest Update

வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Valimai Release Latest Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எச் வினோத் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் வலிமை.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் ஊரடங்கு உத்தரவால் பாதியிலேயே நின்றுள்ளது. இதனால் படத்தை திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.

தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை.. தள்ளி போனது வலிமை?? புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் இதோ

நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகமாகி கொண்டே செல்வதால் ஊரடங்கு உத்தரவும் முடிவுக்கு வருவது போல தெரியவில்லை.

இதனால் படக்குழு படத்தை தீபாவளிக்கு வெளியிட முடியாது என கருதி அடுத்த வருட கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது அஜித் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.