ஒரே நாளில் OTT ரிலீஸில் பெரும் சாதனை படைத்துள்ளது வலிமை திரைப்படம்.

Valimai OTT Record in One Day : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

திரையரங்குகளில் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனையடுத்து மார்ச் 25ஆம் தேதி zee5 இணையதளத்தில் இந்த திரைப்படம் வெளியானது.

படம் வெளியான ஒரே நாளில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜூ5.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.