வலிமை படத்தில் வில்லன் இல்லை வில்லி மட்டும் தான் என கூறப்படுகிறது. அந்த நடிகை யார் என்பதும் தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை, போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்? அஜித்துக்கு ஜோடி யார்? வில்லன் யார்? என எந்தவித அப்டேட்டையும் படக்குழு கொடுக்கவில்லை. ஆனால் அவ்வப்போது சில தகவல்கள் மட்டும் லீக்காகி வருகின்றன.
அப்படி தான் தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது, அதாவது இந்த படத்தில் அஜித்திற்கு வில்லன் எல்லாம் இல்லை வில்லி தான் என கூறப்படுகிறது.
மேலும் வில்லியாக பாலிவுட் நடிகையான ஹீமா குரோஷி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. உண்மை என்ன என்பதை அறிய படக்குழு தான் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும், ஆனால் அவர்கள் அறிவிப்பார்களா? என்பது தான் சந்தேகம்.