Valimai Movie Update

வலிமை பட அப்டேட் ரிலீஸிக்கு அஜித் ஓகே சொல்லி விட்டது போல வாட்ஸப் சாட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Valimai Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

எச் வினோத் இயக்க போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அறிவிப்பு வந்ததோடு இந்த படம் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகாததால் படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படக்குழு அப்டேட்டை வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது.

யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என ட்விட்டர் பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில் வலிமை என்ற வாட்ஸ்அப் குரூப்பில் போனி கபூர் அஜித்திடம் உங்கள் ரசிகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை அப்டேட் விடலாமா என கேள்வி எழுப்ப அஜித் ஓகே என கூறுகிறார்.

அஜித் கொடுத்த வாக்குறுதி.. நிம்மதியா பெருமூச்சு விட்ட தயாரிப்பாளர் – விஷயம் இது தான்.!!

மேலும் போனி கபூர் முதலில் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடலாம் என ஐடியா கொடுக்க யுவன் சங்கர் ராஜா, வினோத் ஆகியோர் செம ஐடியா என பதில் அளிக்கின்றனர்.

இது போன்ற ஒரு வீடியோவை எடிட் செய்து அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இதனை கூடிய விரைவில் நிஜமாக்குங்கள் என போனி கபூர் சார் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

https://twitter.com/ThalaAjith_FC/status/1302971145063247877?s=19
https://twitter.com/kadhalTa/status/1302976610467946499?s=19